சுஜித் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்தது எப்படி? வெளியான பதறவைக்கும் தகவல்கள்.
திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த அந்தோணி தாஸ் - மேரி இவர்களின் 2 வயது மகன் சுஜித் வீட்டின் அருகே தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
நேற்று மாலை 5.40 மணிக்கு நடந்த இந்த சமபவத்தை அடுத்து கடந்த 10 மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றிற்குள் குழந்தை எப்படி விழுந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன்பு 600 அடி தோண்டப்பட்ட அந்த ஆழ்துளை கிணறு தண்ணீர் இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆழ்துளை கிணறு மூடப்பட்டிருந்த பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் கீழே இறங்கியுள்ளது. இதனால் மூடப்பட்ட அந்த ஆழ்துளை கிணறு மண் அரிப்பு காரணமாக மீண்டும் திறந்துள்ளது.
இதனை கவனிக்காத சிறுவர்கள் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருக்கையில் சுஜித் மட்டும் கால் தவறி ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்துள்ளான்.