மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூட்டுக்குடும்பமாக இருந்த நிலையில் முதல் மனைவியை கொன்று, இரண்டாவது மனைவியை பயங்கரமாக தாக்கிய கணவர்.! வெளியான பகீர் காரணம்!!
திருப்பூர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். 36 வயது நிறைந்த இவர் கறிக்கடை வைத்துள்ளார். இவர் சாந்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் திலகவதி என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் திலகவதிக்கு குழந்தை இல்லாத நிலையில் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ரமேஷின் கறிக்கடைக்குள் சாந்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ரமேஷ் தனது முதல் மனைவி சாந்தியை கத்தியால் குத்தி கொலை செய்ததும், தனது இரண்டாவது மனைவியை கடுமையாக தாக்கியதில் அவர் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நான் திலகவதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதில் இருந்து எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் இருந்தது. மேலும் திலகவதி மாத சீட்டு பிடித்து வந்த நிலையில் அடிக்கடி போன் பேசுவார். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இந்நிலையில் சாந்தி மற்றும் திலகவதி இருவரையும் கடைக்கு அழைத்து வந்து, திலகவதியின் கை, கால்களை கயிற்றால் கட்டி யாருடன் பேசுகிறார் என கேட்டு கடுமையாக தாக்கினேன். இதனை தட்டிக்கேட்ட சாந்தியையும் கடுமையாக அடித்து உதைத்தேன் என கூறியுள்ளார்.
மேலும் எனக்கு குடிப்பதை தடுப்பதற்காக யார் சாப்பாட்டில் கலந்து மாத்திரையை கொடுத்தது என கேட்ட நிலையில் சாந்தி நான்தான் என கூறியுள்ளார். உடனே போதையில் இருந்த அவர் அங்கிருந்த கத்தியால் சாந்தியின் தலையில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.