கண்மாயில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு.‌‌.. நள்ளிரவில் கணவன் மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்... போலீசார் விசாரணை...



Husband and wife murder in mudurai

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆண்டிகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலிவேலை பார்த்தும் வரும் கருப்பசாமி அதே ஊரை சேர்ந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரையுடன் அருகில் உள்ள கண்மாயிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். 

அப்போது கருப்பசாமிக்கும் மற்ற இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரை இருவரும் நேற்று இரவு தனது வீட்டில் முன்பு தூங்கி கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

husband and wife 

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தப்பி ஓடிய ராஜதுரையை மட்டும் போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான மழுவேந்தியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.