குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கையில் கட்டைப்பையுடன் சாலை ஓரத்தில் நின்ற கணவன் மனைவி..! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
கட்டைப்பையுடன் சாலையில் நின்று கஞ்சா விற்பனை செய்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர்கள் கணவன் மனைவி சௌந்தரபாண்டியன் - கல்யாணி தம்பதியினர். இவர்கள் இருவரும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நாகனம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நாகனம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு கடையின் அருகில் கணவன் மனைவி இருவரும் கையில் கட்டைப்பையுடன் நின்றுள்ளனர். உடனே அவர்களை சுற்றிவளைத்த போலீசார் அவர்களிடம் இருந்த கட்டைப்பையை பிடுங்கி சோதனை செய்தபோது பைக்குள் இரண்டு கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.