மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி கழுத்தறுத்து படுகொலை... சரணடைந்த கணவன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்.!
சென்னையை அடுத்த ஆவடியில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த கணவனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாராம்மாள் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இவரது மனைவி சாரா மால் தனக்கு முதலில் நடந்த திருமணத்தை மறைத்து ஜான்சனை திருமணம் செய்து இருக்கிறார். இந்த விஷயம் ஜான்சனுக்கு தெரிந்ததால் இருவரிடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து அவரது உடலை கோணிப்பையில் மறைத்து வைத்திருக்கிறார் ஜான்சன். மேலும் இது தொடர்பாக காவல்துறையிடம் சரணடைந்த அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.