மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடத்தையில் சந்தேகம்.. காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்.!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிப் இக்பால் என்பவரும், பிரியங்கா பாட்னா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதல் திருமணத்திற்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. இதனால் ஆசிப் இக்பாலும் அவரது மனைவி பிரியங்காவும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மண்ணடியில் குடியேறினர். தற்போது மண்ணடி பி.வி.ஐயர் தெருவில் வசித்து வருகின்றனர்.
ஆசிப் இக்பால் மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா பாட்னாவும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். பிரியங்கா பாட்னா, தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிப் இக்பாலுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த நபருடன் பழகுவதையும், செல்போனில் பேசுவதையும் ஆசிப் இக்பால் கண்டித்துள்ளார். ஆனாலும் பிரியங்கா பாட்னா, அந்த நபருடனான நட்பை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பிரியங்கா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக சென்று தங்குவதாக கூறி துணிகளை எடுத்துக்கொண்டு இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் இக்பால், வீட்டின் சமையல் அறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தனது காதல் மனைவி பிரியங்கா பாட்னாவின் கழுத்தை அறுத்துள்ளார். பிரியங்கவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். ஆனால் அதற்குள் பிரியங்கா பாட்னா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உயிரிழந்த பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிப் இக்பாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.