மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் நடத்தையில் 52 வயது நிரம்பிய கணவனுக்கு சந்தேகம்.! மனைவியை துடிக்க துடிக்க கொன்று விட்டு கணவன் செய்த காரியம்.!
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் பரத்துடு. 52 வயது நிரம்பிய இவர் தனது குடும்பத்தோடு சென்னை நீலாங்கரை அருகே பண்ணை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாகதங்கி பராமரித்து வந்துள்ளார். பரத்துடு அவரது மனைவியின் நடந்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பரத்துடு, தனது மனைவி சுஜாதாவின் கழுத்தை புடவையால் இறுக்கி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
மனைவி இறந்தபிறகு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் மயங்கி கிடந்த பரத்துடுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரத்துடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.