மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குண்டாக இருப்பதாக மனைவியை கிண்டலடித்த கணவன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!
ஸ்ரீபெரும்புதூர் அருகே குண்டாக இருப்பதாக மனைவியை கணவன் கிண்டல் செய்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிகண்டன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது தனது மனைவி துர்காவின் உடல் பருமனை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த துர்கா இது போன்று கிண்டல் செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனை அலட்சியமாக எடுத்துக் கொண்ட மணிகண்டனின் செயலால், துர்கா வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்வதாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மணிகண்டன், துர்காவை சமாதானம் செய்து அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் சமையலறைக்கு சென்ற துர்கா மீது கேஸ் அடுப்பில் இருந்து திடீரென அவரது உடலில் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து துர்காவின் அவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த மணிகண்டன் தீயை அணைத்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.