மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய கணவர்...
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் உள்ள திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் சரளா. இவர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவரான பாபுவும் அதேபோல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரளா, பாபுவை விட்டுப் பிரிந்து தனிமையில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் சரளா கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது தெருவில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பாபு, சரளாவிடம் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரளாவை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அங்கிருந்தவர்கள் சரளாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் சரளா வாக்குமூலம் தரவே போலீசார் தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.