ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
தாய் இறந்த மூன்று ஆண்டுகள்... இட்லி சாப்பிட மறுத்த குழந்தைக்கு பெரியம்மாவால் நிகழ்ந்த சோக சம்பவம்.!

கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி. இவரின் தங்கை ஜெயராணி கடந்த 3 ஆண்டுகள் முன்பு இறந்ததை அடுத்து அவரின் பெண் குழந்தையை ஆரோக்கியமேரி எடுத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரோக்கியமேரி குழந்தைக்கு இட்லி ஊட்டி விட்டுள்ளார். அப்போது அக்குழந்தை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடி கொண்டு சாப்பிடாமல் இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி குழந்தையை அடித்து வீட்டிற்குள் இழுத்து சென்று குச்சியால் தாக்கியுள்ளார். அவர் தாக்கியதில் குழந்தை மயக்கமாகியுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.