மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தகாத உறவு! இரவில் காதலி ஊற்றிக்கொடுத்த தோசை! ஆசையாக சாப்பிட்ட வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்!
புதுக்கோட்டை அருகே மச்சுவாடி பகுதியில் வசித்து வந்தவர் கலைவாணி. அவரது கணவர் அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில், கலைவாணிக்கு முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்ற லாரி டிரைவருடன் பழக்கம்
ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜதுரை குடித்துவிட்டு கலைவாணி வீட்டிற்கு சென்று அடிக்கடி அவரை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் கலைவாணி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.அதனை தொடர்ந்து ராஜதுரையை கொலை செய்ய திட்டமிட்ட அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவில் எலி பேஸ்டை கலந்து அவருக்கு தோசை ஊற்றி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து இருநாட்களாக கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தார் ராஜதுரையை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசாருக்கு தெரியவந்த நிலையில் கலைவாணியிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் தான்தான் ராஜதுரையைக் கொல்ல முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து கலைவாணியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.