சென்னை: 25 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நண்பர்களின் வெற்றியை கொண்டாடிய அடுத்த கணமே மரணம்..!



in Chennai 25 year Old Youth Dies 


சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளைஞர் கார்த்திக் (25). இவர் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்தவர் ஆவார். தற்போது கீழ்ப்பாக்கத்தில் தங்கி இருக்கிறார். 

நண்பர்களுக்கு ஆதரவு

இவரின் நிறுவனம் சார்பில், சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமையான நீடூர் காலை போட்டி நடந்தபோது, கார்த்திக் பங்கேற்கவில்லை எனினும், அவரின் நண்பர்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். 

chennai

மூச்சடைத்து பலி

நண்பர்கள் அணியை கைதட்டி-ஊக்கப்படுத்தி வந்துள்ளார். இறுதியில் கார்த்திக்கின் நண்பர்கள் அணி வெற்றிபெறவே, அவர் துள்ளல் கொண்டாட்டத்தில் எடுப்பது இருக்கிறார். அப்போது, திடீரென மூச்சுத்திணறி மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: வேலைக்கு ஏன் வரல? கேள்வி கேட்ட மேலாளர் சுத்தியால் அடித்தே கொலை.. சென்னையில் பயங்கரம்.!

இந்த விஷயம் குறித்து சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: சென்னையில் பகீர்.. 16 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தல்.. பதறிய பொதுமக்கள்.. ட்விஸ்ட் வைத்த காவல்துறை.!