"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
தனியார் மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் தற்கொலை... சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் பரபரப்பு புகார்.!
ஈரோடு மாவட்டத்தின் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது பெற்றோரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரது மகள் சௌந்தர்யா இவர் கடந்த இரண்டரை வருடங்களாக ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். தனது வேலையின் காரணமாக மருத்துவமனைக்கு பின்புறத்திலேயே வீடு எடுத்து தங்கி இருக்கிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று பணிக்கு வந்த சௌந்தர்யா மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சௌந்தர்யாவின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ததில் தற்கொலை செய்வதற்கு முன் சௌந்தர்யா யாருடனோ செல்போனில் நீண்ட நேரம் பேசி இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் மகள் இறந்ததை தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்த சௌந்தர்யாவின் பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தங்களின் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சௌந்தர்யாவின் மரணம் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.