Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
தாயைப்பற்றி போதையில் ஆபாச வசைப்பாடல்.. கார் ஓட்டுனரை திரைப்பட பாணியில் கொன்ற முதலாளி.. பதறவைக்கும் சம்பவம்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில், கடந்த ஜன.4ம் தேதி இரத்த காயத்துடன் சாலையோரம் சடலம் ஒன்று இருப்பதாக, வெள்ளிதிருப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த நபரின் செல்போனை வைத்து ஆய்வு செய்தபோது, அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் கிராமத்தில் வசித்து வந்த வெங்கடாசலம் என்பதை உறுதி செய்தனர்.
மர்ம மரணம்
வெங்கடாசலம், ஜம்பை பகுதியில் வசித்து வரும் சேகர் என்பவரின் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில், கார் ஓட்டுநராக கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவது உருத்தியானது. இதனால் அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, வெங்கடாசலம் தனது மரணத்திற்கு முன்பு, அவரின் தம்பி சேகரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
மரணத்தில் சந்தேகம்
அப்போது, எனக்கும் - நிறுவனத்தின் உரிமையாளருக்கும் பிரச்சனை. அவர் காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டார் என கூறியுள்ளார். தகவலை அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த வெங்கடாசலத்தின் மனைவி மரகதம், கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவரின் உடல் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாரிகள் உரத்தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கொடுமை.!
தாய் குறித்து வசைப்பாடல்
இதனால் அவரின் மீது விசாரணை திரும்பிய நிலையில், சேகர் மற்றும் மூர்த்தி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதாவது, கடந்த ஜன.3 அன்று மதியம் சேகர், மூர்த்தி, வெங்கடாசலம் மூவரும் உரத்தயாரிப்பு மூலப்பொருட்கள் வாங்க காரில் சென்றனர். சாலையோரம் காரை நிறுத்தி மதுபானமும் வழியில் அருந்தியுள்ளனர். போதையில் இருந்த சேகர், வெங்கடாசலத்தின் தாய் பற்றி அவதூறு கூறியுள்ளார்.
ஆத்திரத்தில் கொலை
இதனால் இருவரும் மாறி-மாறி அவர்களின் தாய் பற்றி திட்டிக்கொள்ள, ஆத்திரமடைந்த சேகர் வெங்கடாசலத்தை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். போதையில், தாயைப்பற்றி திட்டிவிட்டானே என வெங்கடாசலத்தின் மீது ஆத்திரம் கொண்டு இருந்த சேகர், 5 கிமீ சென்று, பின் மீண்டும் வந்து போதையில் சாலையில் நடந்து சென்ற வெங்கடாசலத்தை கார் ஏற்றிக்கொலை செய்துள்ளார். மறுநாள் காலையில் வெங்கடாசலத்திற்கு போதை தெளிந்து தொடர்புகொண்டபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக போனை எடுத்தவர் கூறி இருக்கிறார்.
உண்மையை உணர்ந்துகொண்ட சேகர், காரில் இருந்த இரத்தக்கறைகளை மூர்த்தியின் உதவியுடன் சுத்தம் செய்து பின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவானது அம்பலமானது. இவர்கள் இருவரையும் தற்போது காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: குடும்பத்தினர் கண்முன் மின்னல் தாக்கி சோகம்; துக்க வீட்டிற்கு வந்த 25 வயது இளைஞர் பெற்றோர் கண்முன் பலி.!