காதலித்து குத்தமா? இளம்பெண் கொடூர கொலை.. முக்கோண காதலால் சேலத்தில் நடந்த பயங்கரம்.!



in Salem a Love Girl Killed by Man 

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், விநாயகர் தெருவில் வசித்து வருபவர் லோகநாயகி (வயது 32). இவர் சேலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த 4 நாட்களாக மாயமானார். இதுகுறித்து அவரின் தோழிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். 

இதனிடையே, ஏற்காடு பகுதியில் பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், லோகநாயகி இளைஞர் ஒருவரிடம் பேசியது தெரியவரவே, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின் நடந்த விசாரணையில், இளைஞர் அப்துல் ஹபீஸ் பெண்ணை விஷ ஓசி செலுத்தி கொலை செய்தததாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்த்து விபத்து; 10 மாணவ-மாணவியர்கள் காயம்.!

Salem

முக்கோண காதலால் விபரீதம்

அதாவது, அப்துல் கமீஸ் லோகநாயகி உட்பட 2 பெண்களை ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை காதலித்து இருக்கிறார். லோக்நாகிக்கு தன்னை விட வயது அதிகம் என்பதால், திருமணத்திற்கு அவர் விரும்பவில்லை. ஆனால், லோகநாயகி காதலில் உறுதியாக இருந்து திருமணத்திற்கு வற்புறுத்த, அவரை கொலை செய்ய முடிவெடுத்து, காதலிகளிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர்களின் உதவியோடு விஷ ஊசி செலுத்தி லோகநாயகியை கொலை செய்தவர், உடலை ஏற்காடு பகுதியில் வீசி இருக்கிறார். இதனையடுத்து, உண்மையை அறிந்த காவல்துறையினர், அப்துல், அவரின் இரண்டு காதலிகள் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

விஷாலின் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் முக்கோண காதல் தொடர்பான காட்சிகள் இருக்கும். அதுபோல, இங்கு அப்துல் நடத்திய காதல் லீலை, இறுதியில் பெண்ணின் உயிருக்கு எமனாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: சேலத்தில் பயங்கரம்.. குழந்தைகள் இருவர் பலி., குடும்பத்தினர் 3 பேர் படுகாயம்.. சரமாரி தாக்குதல்.!