திருச்சி: பெல் நிறுவனத்தில் சோகம்; துறை மேலாளர் மர்ம மரணம்.. காவல்துறை விசாரணை.!



in Trichy Thiruverumbur Bell company Manager Dies by Suicide

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில், பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என 7000 க்கும் அதிகமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

பெல் நிறுவனத்தின் பிரிவில், பொதுமேலாளராக வேலை பார்த்து வருபவர் சண்முகம் (வயது 50). நேரு வழக்கம்போல பணிக்கு வந்தவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சண்முகத்தை குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

trichy

அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக அலுவகத்தில் உள்ள அறைக்குச் சென்றபோது, அவரின் அரை உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலக பணியாளர்கள், கதவை உடைத்து பார்த்தபோது சண்முகம் கையில் துப்பாக்கியுடன் சடலமாக இருந்தார்.

இதையும் படிங்க: திருச்சி: 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; இரட்டை சகோதரர்கள் போக்ஸோவில் கைது, எலும்பு முறிவு.!

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பெல் காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சண்முகத்தின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சி: "என் பொண்டாட்டி பிரிஞ்சு போயிட்டா" - ரவுடி எடுத்த விபரீத முடிவு.. தூக்கிட்டு தற்கொலை.!