திருச்சி: "என் பொண்டாட்டி பிரிஞ்சு போயிட்டா" - ரவுடி எடுத்த விபரீத முடிவு.. தூக்கிட்டு தற்கொலை.!



in Trichy Rowdy Dies by Suicide

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் ரௌடி தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இளையராஜா (வயது 36). உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த இளையராஜாவின் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

இளையராஜாவின் மனைவி கனகா. தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். குடிபோதைக்கு அடிமையான இளையராஜா, எப்போதும் மதுபானம் அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த துயரம்.. வீடுபுகுந்து அத்துமீறல்.!

trichy

விபரீத முடிவு எடுத்தார்

இந்த செயல்பாடுகள் தொடர்ந்ததால், ஒருகட்டத்தில் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மகனுடன் வசித்து வந்த இளையராஜா, மனைவியை சமாதானம் செய்ய இயலாமல் தவித்துள்ளார். 

 

இதுதொடர்பான விரக்தியில் அவர் தனது மனைவியின் சேலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மர்ம நபர் ரயிலில் அடிபட்டு மரணம்.. 'ஆர்பிவி' என டாட்டூ.. திருச்சி அருகே சோகம்.!