சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
#Breaking: ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண் பலாத்கார முயற்சி; 4 மாத சிசு உயிரிழப்பு..!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இளம்பெண், சம்பவத்தன்று திருப்பூரில் தான் பணியாற்றும் பனியன் நிறுவனத்தில் விடுமுறை எடுத்து, சொந்த ஊர் சென்றுகொண்டு இருந்தார். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இரயிலில், பெண்கள் பெட்டியில் அவர் பயணம் செய்தார். இரயில் ஜோலார்பேட்டையை கடந்த பின், அந்த பெட்டியில் ஏறிய ஹேமராஜ் என்ற நபர், பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டார்.
பெண்மணி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தும், சைக்கோ கொடூரன் பெண்ணை தாக்கி பலவந்தப்படுத்தி முயற்சித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை இரயிலில் இருந்து தள்ளி கொலை செய்யவும் முற்பட்டார். தற்போது பெண்மணி உயிருக்கு போராடும் நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
சிசு உயிரிழந்தது
இந்நிலையில், இரயிலில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணின் சிசு பலியாகி இருக்கிறது. கர்ப்பிணி என்று கூறியும் சைக்கோ கொடூரன் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை இரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முற்பட்ட சோகம் நடந்து இருந்தது. இதனிடையே, பெண்ணின் சிசு பலியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: வேலூர்: இரயில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; குற்றவாளி கழிவறையில் வழுக்கியதால் எலும்பு முறிவு.!
இதனால் இறந்த சிசுவை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார். சிசு வயிற்றில் இருந்தால் பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால், பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, இறந்த சிசுவை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.
இதையும் படிங்க: வேலூரில் ஓடும் இரயிலில் பெண் பலாத்கார முயற்சி; தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்..!