மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது மாணவரை தன்னுடன் அழைத்துச்சென்ற ஆசிரியை; விருதுநகரில் நடந்த சம்பவம்.!
பள்ளி மாணவருடன் அறையெடுத்து தங்கியிருந்த ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் 17 வயதுடைய மாணவர், சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமாகினார். அவரை காணாது பரிதவித்த பெற்றோர், அங்குள்ள ஆவியூர் காவல் நிலையத்தில் மகனை கண்டறிந்து தரக்கூறி புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், மாணவர் மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: கடைசியா ஒரேயொரு தடவை... கெஞ்சிய கள்ளக்காதலன்.. மறுப்பு தெரிவித்த பெண் பேருந்து நிலையத்தில் படுகொலை.!
பள்ளியில் பழக்கம்
இந்த விசாரணையில், மாணவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், தான் கல்லூரியில் சேர்ந்து படிக்க போவதாக தகவல் இருந்துள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், மாணவர் பயின்று வந்த பள்ளியிலும் விசாரணை செய்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட மாணவர், தான் பயின்று வந்த பள்ளியில் வேலை பார்த்து வந்த ஆசிரியை பாத்திமா கனி என்பவருடன் பழகி வந்தது தெரியவந்தது.
போக்ஸோவில் ஆசிரியை கைது
இதனையடுத்து, பாத்திமா கனியின் செல்போன் நம்பரை பெற்ற காவல் துறையினர், அவர்களின் இருப்பிடத்தை சோதனை செய்தனர். அப்போது, இருவரும் புதுச்சேரியில் இருப்பது உறுதியான நிலையில், அங்கு சென்ற ஆவியூர் காவல் துறையினர் இருவரையும் விருதுநகர் அழைத்து வந்தனர். சிறுவன் மீட்கப்பட்டு, ஆசிரியை போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் காமத்தால் பறிபோன உயிர்.. விடுதி அறையில் விண்ணுலகம் அனுப்பிய காதலி.!