மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுவரை பலருக்கும் தெரிந்திடாத, தமிழகத்தின் மிகப்பெரிய மஞ்சுவிரட்டு தொழுகை!
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் தழுவுவது தான் இந்த வீர விளையாட்டு. தமிழகத்தில் 2016ல் நடந்த ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் சென்றடைந்தது தமிழர்களின் வீரவிளையாட்டு.
ஜல்லிக்கட்டுக்கு பேர்போன மாவட்டம் என்றால் அது மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை தான். ஆம் சமீபத்தில் அதிகப்படியான காளைகளை அவிழ்த்து விட்டு கின்னஸ் சாதனை படைத்தது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு. மேலும் தமிழகத்தில் அதிகப்படியான வாடிவாசல் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை தான்.
இதுவரை பலருக்கும் தெரிந்திடாத தமிழகத்தின் மிகப்பெரிய மஞ்சுவிரட்டு தொழுகை ஒன்று உள்ளது. இந்த வாடிவாசல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சங்கந்திடல் தான். இப்படி ஒரு பிரம்மாண்ட தொழுவம் இருப்பது பலரும் அறியாத ஒன்றாக உள்ளது.
1942 ல் மிக உறுதியான கற்களால் கட்டப்பட்டு 16+16 என தனித்தனி அறைகளாக கட்டப்பட்டு ஒவ்வொரு அறைகளிலும் மாடுகள் கட்ட ஏதுவாக கற்களினாலேயே துளையுடன் கூடியவாறு அமைத்துள்ளனர். அப்போது கட்டப்பட்ட இந்த தொழுவம் இன்றும் எந்த சேதமும் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் மிக உறுதியாய் காட்சி அளிக்கின்றது.
ஆனால் அந்த தொழுவத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் உயிரற்றவாறு உள்ளது பிரமாண்ட தொழுவம்.
மீண்டும் அந்த பிரமாண்ட தொழுவத்தில் மஞ்சுவிரட்டு நடத்தி இவற்றை மீட்டெடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கூறுகின்றனர்.