மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு திருமண நாள் இந்தாங்க பாயசம்..... குடித்த சற்று நேரத்தில் 5 பவுன் நகை அபேஸ்.!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகவள்ளி. மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி மூதாட்டி கனகவள்ளி, வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை காணாமல் போயிருந்தது. இதுகுறித்து கனகவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கனகவள்ளி வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண், மூதாட்டி கனகவள்ளிக்கு மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கொடுத்து நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கனகவள்ளி, கோவிலுக்கு சென்றபோது பத்மாவதியுடன் பழக்கம் ஏற்பட்டது. பாசமாக பழகிய பத்மாவதியை மூதாட்டி கனகவள்ளி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்துள்ளார். அப்போது கனகவள்ளி தனியாக வசிப்பதை அறிந்து கொண்ட பத்மாவதி அவரிடம் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு மீண்டும் மறுநாள் மூதாட்டி கனகவள்ளி வீட்டுக்கு சென்ற பத்மாவதி, மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கனகவள்ளியிடம் கொடுத்துள்ளார்.
பாயசத்தை குடித்த சற்று நேரத்தில் மூதாட்டி கனகவள்ளி மயங்கியுள்ளார். அவர் மயங்கியவுடனே அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் பத்மாவதியை கைது செய்தனர்.