விடுதலை 2ம் பாகத்தின் பாடல் நாளை வெளியீடு; காந்த குரலில் இழுக்கும் இளையராஜா.. ப்ரோமோ உள்ளே.!
அம்மாவின் இரண்டாமாண்டு நினைவு தினம்! சென்னையில் ஊர்வலம்; அஇஅதிமுக அழைப்பு
தமிழ்நாட்டின் முன்னால் முதல்வரும் அஇஅதிமுக-வின் முன்னால் பொதுச் செயலாலருமான புரட்சி தலைவி அம்மா அவர்களின் நினைவு தினத்தன்று மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க கழக உறுப்பினர்களுக்கு அதிமுக கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவரின் நெருங்கிய தோழி சசிகலா இப்போது சிறையில் உள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டணி சேர்ந்து கட்சியையும் ஆட்சியையும் தக்கவைத்துள்ளனர். டிடிவி தினகரன் பிரிந்து தனது ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் டிடிவி வெற்றி பெற்றார். ஆனால் எவ்வளவோ முயன்றும் ஆட்சியை அவரால் கலைக்க முடியவில்லை. 18 MLA க்களின் பதவிகள் பறிபோனது தான் மிச்சம்.
இந்நிலையில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இறந்து இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. முதலில் பகையாக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பின்னர் சுதாரித்துக் கொண்டு கட்சியையும் ஆட்சியையும் இரண்டு வருடங்களாக வழிநடத்தி வருகின்றனர். எத்தனையோ இண்ணல்கள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து ஆட்சிக்கு எந்த சிக்கலும் வராமல் பார்த்துககொள்ளும் இவர்களது திறமையை பாராட்டியே தீர வேண்டும்.
அம்மா அவர்களின் இரண்டாமாணடு நினைவு தினம் டிசம்பர் 5 ஆம் தேதி (புதன்கிழமை) வருவதையொட்டி மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க அஇஅதிமுக கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கழக உறுப்பினர்களுக்கு அஇஅதிமுக தலைமை கழகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9:30 மணிக்கு அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.