மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மயானமாக மாறிய ஆடுகளம்; சுருண்டு விழுந்து களபலியான கபடி வீரர்!, கலங்க வைக்கும் வீடியோ வெளியானது..!
கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் அருகேயுள்ள புறங்கணி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி அணி வீரரான இவர், சேலத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள மானடிக்குப்பம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புறங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டு காளை அணியும் பங்கேற்றது. நேற்று இரவு மின்னொளியில் நடந்த போட்டியில் விமல்ராஜ் தனது அணிக்காக களமிறங்கினார்.
போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில் விமல்ராஜ் தனது அணிக்காக ரெய்டு சென்றார். எதிரணி வீரர்கள் அவரை மடக்க முயற்சித்த போது தாவி தப்பினார். இன்னொரு வீரர் அவரை பிடிக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்தனர். எதிரணி வீரரின் கால் விமல்ராஜின் கழுத்தில் பட்டது. இருந்த போது விமல்ராஜ் இதற்குள்ளாக எல்லை கோட்டை தொட்டிருந்தார்.
இதனையடுத்து மேலே எழுந்த விமல்ராஜ், திடீரென சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு, அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்ஏற்கனவேஉயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெரு சார்ந்த விமல்ராஜ், விளையாடும் போதே இயற்கை எய்தியது கடுந்துயரத்தை தருகிறது. (1) pic.twitter.com/6M9HKaqpxr
— SG Suryah (@SuryahSG) July 25, 2022
இந்த துயர சம்பவம் குறித்து, விமல்ராஜின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கபடி விளையாட்டின் போது விமல்ராஜ் மயங்கி விழுந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.