தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மகேந்திரன் தான் முதல் துரோகி.! கமல் ஆவேசத்துடன் வெளியிட்ட அறிக்கை.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
மக்கள் நீதி மய்யத்திலிருந்து அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் விலகினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், மற்றும் சிங்காநல்லூரில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் மற்றும் டெபாசிட் பெற்றனர். மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
மொத்தம் 2.45 சதவித ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றது. இந்நிலையில், தேர்தல் தோல்வி எதிரொலியால் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். துணை தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மவுரியா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
களை எடுப்போம் pic.twitter.com/8HqAoz0Udt
— Kamal Haasan (@ikamalhaasan) May 6, 2021
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்துள்ளனர் என்பதை கண்கூடாக கண்டோம். களையெடுக்கப்பட வேண்டிய துரோகிகளில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பலரை தலையெடுக்க விடாமல் தடுத்ததே இவரது சாதனை.
தன்னை எப்படியும் நீக்கி விடுவர் என்பதை அறிந்தே புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான்.கோழைகளை நாம்பொருட்படுத்த வேண்டியதில்லை. மண், மொழி காக்க களத்தில் நிற்போம். என குறிப்பிட்டுள்ளார்.