மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல்ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதி... என்னாச்சு.? பதறிய ரசிகர்கள்.! மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் செம பிசியாக வலம் வருகின்றார். ஒருபக்கம் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
இந்தநிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படத்தில் கமல் நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், உடல்நிலை கோளாறு காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம். அந்த அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக போரூர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நலமாக உள்ளார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.