மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Today No Leave: இன்று பள்ளிகள் விடுமுறை இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..! மழைக்கான விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை.!
மழைக்கு விடுக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை மற்றும் புயலின் தாக்கத்தால் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டன.
அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டன.
அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் பொருட்டு, இன்று சனிக்கிழமை (21-01-2023) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் புதன்கிழமை பாடவேலையை பின்பற்றி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.