திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சண்டையை மத்தியஸ்தம் செய்ய சென்றவரை மார்சரியில் படுக்க வைத்த சோகம்.. பறிபோன உயிர்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், சேலையனூர் கிராமத்தை சார்ந்தவர் சுரேஷ் (வயது 38). சுரேஷின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சந்திர சேகர். இவரது வீட்டிற்கு, நேற்று இரவு நேரத்தில் வந்த அதே பகுதியை சார்ந்த தட்க்ஷிணா மூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள், சந்திர சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக்கண்ட சுரேஷ் இருதரப்பையும் தடுத்து கண்டித்த நிலையில், சுரேஷிற்கும் - தட்க்ஷிணா மூர்த்தி தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். மேலும், சுரேஷை அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதனால் சுரேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக சுரேஷை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சுரேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தட்க்ஷிணா மூர்த்தி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.