திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டது" நீதிபதிகளுக்கு ஷாக் கொடுத்த கோயம்பேடு போலீஸ்.. ட்விஸ்ட் வைத்த நீதிபதி.!
காவல் நிலையத்தில் பாதுகாப்பில் இருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக காவல்துறையினர் பதில் அளித்ததால், நீதிபதி கைது செய்யப்பட்டவர்களை நிரபராதி என கூறி விடுதலை செய்தார்.
சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2018 ஆகஸ்ட் மாதம் கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கோயம்பேடு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போதை பொருள் கடத்தல் வழக்கை விசாரணை செய்யும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்ததாக கூறப்பட்ட 30 கிலோ கஞ்சாவுக்கு பதில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 19 கிலோ கஞ்சா எங்கே என நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு, "கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. காவல் நிலைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால், கஞ்சா எலிகளால் கடிக்கப்பட்டு அதன் அளவு குறைந்து விட்டது" என்று எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன நீதிபதி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிவிட்டதாக கூறி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்த மூன்று பெண்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் 581 கிலோ கஞ்சா எலிகள் தின்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனைப்போல மேற்கூறிய சம்பவமும் நடந்துள்ளளது.