நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு!



laddu in madurai meenachi amman temple


தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். மீனாட்சி அம்மன் கோவில்1,600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலில் முக்கிய விழாவாக ஆண்டுதோறும் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

madurai meenatchi

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக 30 கிராம் லட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

கோயிலுக்கு வரும் பக்தர்கள், மீனட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் பக்தர்களுக்கு இந்த இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இதனை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.