மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடியோகால் செய்து விளையாட்டாக வக்கீல் செய்த காரியம்! நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்!
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் புதுநகர் பகுதியில் வசித்துவந்தவர் சுரேஷ். 28 வயது நிறைந்த அவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் 27-ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். ஆனால் திடீரென மணப்பெண் சுரேஷிடம் பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மனவிரக்தியடைந்த சுரேஷ் அந்த பெண்ணிற்கு வீடியோகால் செய்து நீ என்னுடன் பேசவில்லை என்றால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என மின்விசிறியில் கயிற்றைக் கட்டி மிரட்டியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக நாற்காலி கிழே விழுந்து, கயிறு அவரது கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனே சுரேஷின் நண்பருக்கு போன்செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.அவர் அங்கு விரைந்து சென்றபோது சுரேஷின் அறைஉள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து இறுக்கப்பட்டு சுரேஷ் உயிரிழந்த நிலையில் தொங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து இதுகுறித்து போலிசாருக்கு தகவலளிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.