வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழப்பு.! 5 குழந்தைகள் காயங்களுடன் மருத்துவனையில் அனுமதி.!
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு ஆட்டோ பள்ளிக்கு சென்றது.
அந்த ஆட்டோ அனவரதநல்லூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. கவிழ்ந்த ஆட்டோவிற்கு அடியில் சிக்கிய எல்.கே.ஜி படித்து வந்த சிறுவன் செல்வநவீன் உடல் நசுங்கி உயிரிழந்தான். மேலும், 5 குழந்தைகள் காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.