96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உறவினரின் வீட்டில் காதல் ஜோடி விபரீத செயல்.. உயிருக்கு போராடும் பெண்.. காதலன் பலி..!
மண்ணச்சநல்லூரில் உறவினரின் வீட்டிற்கு சென்று தங்கிய காதல் ஜோடியில், ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெண்மணி கத்தியால் கை, கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், உயிருக்கு போராடியவாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாலையீடு, சண்முகா நகரை சார்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வினித் (வயது 28). வினித் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மதுரை மாவட்டத்தில் உள்ள பொன்மேனி பைபாஸ் ரோடு பகுதியை சார்ந்தவர் உமாபதி. இவரது மகள் நிவேதா (வயது 25).
வினித்தும் - நிவேதாவும் சில வருடமாக காதலித்து வந்த நிலையில், நேற்று மாலை வினித் தனது காதலியை அழைத்துக்கொண்டு மண்ணச்சநல்லூர் பகுதியில் வசித்து வரும் பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு உணவு சாப்பிட்ட காதல் ஜோடி, மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர். பின்னர், நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை.
வினித்தின் பெரியம்மாவும் இரவில் உறங்கிவிட்ட நிலையில், காலையும் காதல் ஜோடி கீழே வராததால் சந்தேகமடைந்து மாடிக்கு அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வினித் போர்வையை கழுத்தில் கட்டி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு பிணமாக தொங்கிய நிலையில், நிவேதாவின் கழுத்து மற்றும் கைகளில் கண்ணாடியால் கிழித்து உயிருக்கு போராடி மயங்கி இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வினித்தின் பெரியம்மா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர், வினித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய நிவேதாவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மண்ணச்சநல்லூர் காவல் துறையினர், காதலர் தற்கொலை மற்றும் காதலியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.