மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திட்டம்! மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்!!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அரசு பள்ளிகளில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டமானது நாகை மாவட்டத்தின் திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மு க ஸ்டாலின் அவர்கள் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த திட்டமானது பெரிதும் பயன்படும் என்ற எண்ணத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கம் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.