மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: மதுரை சித்திரைத்திருவிழா... கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி உட்பட 2 பேர் மரணம்.. 5 பேர் காயம்.!
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாட 2 வருடங்களுக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ள காரணத்தால், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். இதனால் அம்மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. காவல் துறையினர் சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆண், பெண் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் யார்? என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.