கஞ்சா விற்கச் சொல்லி காவல்துறை கட்டாயப்படுத்துகிறது! மதுரை ஆட்சியரிடம் தாய்-மகள் புகார்!



Madurai Ganja Lady Complaint on police

மதுரை மாவட்டம் பெரியபட்டி காஞ்சரம் பேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி. இவருடைய மகள் பஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றுப் பிழைப்புக்காக தாயும், மகளும் அப்பகுதியில் கஞ்சா வாங்கி விற்று வந்துள்ளனர்.

இந்த தொழிலால் தனது குடும்பமே சீரழிந்துவிட்டதுடன், தனது கணவரும் இறந்த நிலையில் தனது தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் திருந்தி வாழவேண்டும் என்பதால் கஞ்சா வாங்கி விற்கும் தொழிலை கடந்த மூன்று மாதங்களாக விட்டுள்ளார் பஞ்சு.

kanja

இதனையடுத்து, இருவரும் திருந்தி இட்லி கடை நடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா விற்க வலியுறுத்தியதோடு, இருபதாயிரம் பணம் கொடுக்காவிட்டால் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக போய் வழக்கு போடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், பஞ்சு கஞ்சா விற்பனை செய்வதை மறந்து புதிய வாழ்க்கையை வாழ வாழ விரும்புகிறேன். ஆனால் என்னை துன்புறுத்தி மீண்டும் கஞ்சா விற்க சொல்லி காவல்துறையில் துன்புறுத்துவதால் தானும் தனது தாயாரும் தற்கொலை செய்யப்போவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.