மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் காவலர்களிடம் அரிவாள்மனையை காண்பித்து கொலை மிரட்டல்.. போக்கிரி பெருமாள் பரபரப்பு செயல்.!
விசாரணைக்காக சென்ற பெண் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூர், மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்தவர் பெருமாள். இவரது மனைவி, கணவரின் மீது புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணைக்காக பெண் காவலர்கள் சங்கீதா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர் பெருமாளின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, பெண் காவலர்களை அவதூறாக பேசிய பெருமாள், கையில் அரிவாள்மனையை எடுத்து வந்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகவே, காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.