மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோட்டரை இயக்கியபோது சோகம்: மின்சாரம் தாக்கி 29 வயது இளம்பெண் உயிரிழப்பு.!
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி, பட்டறை தெரு பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வன். இவரின் மனைவி ரோஷினி (வயது 29).
சென்னையில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வழியே வேலை பார்த்து வந்துள்ளார்.
இதற்கிடையில், நேற்று வீட்டிலிருந்த மின்மோட்டாரை இயக்கிய சமயத்தில், எதிர்பாராத விதமாக ரோஷினியை மின்சாரம் தாக்கியிருக்கிறது.
உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட பெண்மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த உசிலம்பட்டி காவல் துறையினர், ரோஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.