தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மூதாட்டியை ஏமாற்றி ரூ.17 இலட்சம் நூதன மோசடி.. கேர் டேக்கர் பெயரில் களவாணித்தனம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் பத்ரி. இவர் வேலைக்காக கடந்த ஜனவரி மாதத்தில் மும்பை வந்த நிலையில், காந்திவிலி பகுதியில் தனியே வசித்து வந்த மூதாட்டியின் இல்லத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது, மூதாட்டியின் வங்கி ஏ.டி.எம் கார்டை பார்த்துள்ளார்.
மூதாட்டி தனியே வசித்து வருவதால் ஏ.டி.எம்மில் இருக்கும் பணத்தை அபகரிக்க திட்டமிட்ட நிலேஷ், ஏ.டி.எம் காட்டின் ரகசிய நம்பர் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்களை சேகரித்துள்ளார். இதனையடுத்து, கார்டின் ரகசிய எண்ணை மாற்ற யூடியூப் வீடியோ பார்த்து, சம்பவத்தன்று மூதாட்டியின் கணக்கு உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.
அங்கு, மூதாட்டியின் செல்போன் மற்றும் ஏ.டி.எம் தொலைந்துவிட்டதாக கூறி, தனது அலைபேசி எண்ணை வழங்கி கார்டின் ரகசிய நம்பரை பெற்றுள்ளார். இதன்பின்னர், அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 இலட்சம் தொகையை தனது வங்கிக்கு மாற்றி அமைதியாக இருந்துள்ளார்.
சில நாட்கள் கழித்து சொந்த ஊரில் தொழில் செய்ய செல்கிறேன் என மூதாட்டியிடம் கூறிவிட்டு சென்ற நிலையில், மூதாட்டியின் மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 இலட்சம் மாயமானது தெரியவந்தது. தாயிடம் இதுகுறித்து கேட்கையில் நிலேஷின் மோசடித்தனம் அம்பலமாகியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மூதாட்டியின் மகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் நிலேஷை தேடி வந்தனர். அப்போது, தகசீர் நகரில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த நிலேஷை அதிகாரிகள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.