பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அச்சச்சோ.. நீங்க வாங்குற தங்கம் உண்மையான தங்கம்தானா? இதை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க..! இல்லனா வாங்கியும் பிரயோஜனம் இல்லை..!!
தங்கம் என்றால் பிடிக்காத நபர்களையும், விரும்பாத நபர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் தங்கத்தில் ஹால்மார்க் என்பது இன்றளவில் பெருமளவு கவனிக்கப்படுகிறது. விளம்பரங்களிலும் சரி, மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளிலும் சரி ஹால்மார்க் தரம் இல்லாத நகைகள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல தங்கத்தின் அளவு ஹால்மார்க் மூலமாக கணக்கிடப்பட்டு வங்கிகளில் கடன்வாங்கும்போது அவை பெரும் உதவிசெய்கிறது. இதனாலையே தங்கம் பலராலும் விரும்பப்படுகிறது. தங்க விலை என்னதான் அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்றாலும், அதனை வாங்கும் மக்களும் ஒருபுறம் இருக்கதான் செய்கின்றனர்.
ஆனால் நாம் வாங்கும் தங்கம் உண்மையிலேயே தங்கம் தானா? என்ற கேள்வியும் உள்ளது. இதற்காக தற்போது ஹால்மார்க் திட்டம் வந்துள்ளது. இவை முன்பே இருந்தாலும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்பு வரை 4 இலக்கங்கள் எண்ணை கொண்ட ஹால்மார்க் முத்திரை நகைகள், தற்போது 6 இலக்க எண்களின் வெளியாக உள்ளது. அதன்படி 6 இலக்க எண் கொண்டிருக்கும் ஹால்மார்க் முத்திரை நகைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும்.
அதேபோல 4 இலக்க எண்களை வைத்திருப்பவர்கள் பயம் கொள்ள வேண்டாம். இனி புதிதாக நகைகள் வாங்கினால் 6 இலக்க மார்க் இருக்கிறதா? என்பதை சோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் ஹால்மார்க் எண் கொண்ட தங்கம் அதிக மதிப்பினை வழங்குவதோடு தங்கத்தின் தரத்தையும் உறுதி செய்கிறது. இனி ஹால்மார்க் இல்லாத நகையை விற்பனை செய்தால் ஐந்து மடங்கு அபராதம் கடைக்காரர்களுக்கு விதிக்கப்படும்.