#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆண்களின் சைக்கிளில் கிடைமட்ட குறுக்கு கம்பிகள் ஏன்?.. ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இதோ.!
மிதிவண்டிகள் என்பது நம்மிடையே ஒரு இணைபிரியா நண்பனாக இன்றளவும் இருந்து வருகிறது. காலத்தின் மாற்றம் மற்றும் கண்டுபிடிப்புகள் காரணமாக இருசக்கர வாகனம், கார் என வாங்கி பயணம் செய்ய தொடங்கினாலும், சைக்கிளின் மீதுள்ள மோகம் இன்றளவும் பலருக்கும் குறையாமல் தான் உள்ளது.
அது ஏன், இன்றளவும் இருசக்கர வாகனம் இல்லாத குடும்பம் கூட இந்தியாவில் உள்ளது. இவர்கள் பெரும்பாலும் தங்களின் பயணத்திற்கு சைக்கிளையே உபயோகம் செய்வார்கள். அவர்களின் வேலைதூரத்திற்கு ஏற்ப சிறிய சைக்கிள், கம்பி வைத்த சைக்கிள் ஆகியவற்றை உபயோகம் செய்வார்கள். இதில், பெண்கள் உபயோகம் செய்யும் சைக்கிளில் கிடைமட்ட குறுக்கு கம்பிகள் இருப்பது இல்லை. ஆனால், பெருமளவில் ஆண்கள் உபயோகம் செய்யும் பெரிய சைக்கிள்களில் கிடைமட்ட குறுக்கு கம்பிகள் இருக்கும். இவை ஏன் உள்ளது என்று தெரியுமா?..
ஆண்கள் உபயோகம் செய்யும் சைக்கிள் பெரும்பாலும் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வகையில் அல்லது இருக்கைக்கு பின்புறம் உள்ள கேரியரில் பெரிய அளவிலான பொதியை ஏற்படுத்த உபயோகம் செய்வோம். சிறிய ரக சைக்கிளில் கேரியரில் பெரிய அளவிலான பொதிகளை ஏற்றி பாரத்தை அதிகரித்தால், சைக்கிள் தடுமாற தொடங்கும். ஒரு சமயத்திற்கு மேல் பாரம் தாங்காமல் ஹேண்டில் பார் அருகேயுள்ள கம்பி உடையவும் வாய்ப்பு உள்ளது.
பெரிய சைக்கிள் பாரத்தை ஏற்றிச்செல்ல உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால் அதன் பின்னால் உள்ள கேரியரில் பாரத்தை ஏற்றினாலும், சைக்கிளை ஓட்டும் போது அது தடுமாற்றத்தை கொடுக்காது, அதிக பாரமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் அழுத்தத்தை கம்பி சமமான அளவு பிரித்துக்கொள்வதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சைக்கிள் கம்பி உடையும் அபாயம் குறைவு.
பெண்கள் பெரிய சைக்கிளை பெரும்பாலும் இயக்குவது இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் வயல்வேலைகளுக்கு செல்லும் வீட்டில் உள்ள பெரிய சைக்கிளை பெண்கள் இன்றளவும் இயக்கத்தான் செய்கிறார்கள். வணிக ரீதியாக பெரிய சைக்கிள் பெரும்பாலும் ஆண்களால் உபயோகம் செய்யப்படுவதால் அவை ஆண்கள் சைக்கிள் என்றும், பெண்களை வசீகரிக்க அழகிய தோற்றத்துடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள் பெண்கள் சைக்கிள் என்றும் பரிமாற்றம் அடைந்தது. இதில் விஷயம் பாரம் தாங்கும் தன்மை தான்.