மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி.!
சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. 39 வயது நிரம்பிய இவர் கூலி தொழில் செய்துவந்துள்ளார். இவர் வயல்வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த 65 வயது மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.