மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுவால் மதியிழந்த தந்தை.. மகனை நோக்கி பாய்ந்த தோட்டா..! தவறிய குறியால் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.!!
மகனை நாட்டுத் துப்பாக்கியில் சுடும்பொழுது குண்டு தாக்கி அருகிலிருந்த 5 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அடுத்த நலமங்காடு பகுதியை சேர்ந்தவர் கரியராமன். இவரது மகன் ஏழுமலை. இந்தநிலையில் நேற்று மதுபோதையில் இருந்த கரியராமன் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டதால், ஏழுமலை அவரை கண்டித்துள்ளார்.
ஆவேசமடைந்த கரியராமன் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தனது மகனை நோக்கி சுட்டுள்ளார். சுதாரிப்படைந்த ஏழுமலை சற்று விலகவே, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த பால்ஸ் குண்டுகள் சுவற்றில் பட்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 சிறுவர்களின் மீது பாய்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர்களது குண்டுகள் அகற்றப்பட்டன. மேலும் தாக்குதல் நடத்தியதற்காக கரியராமன் மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, புகாரை ஏற்ற காவல்துறையினர் கரியராமனை கைது செய்துள்ளனர்.