மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் ஆசை! மசாஜ் சென்டர் சென்ற தொழிலதிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
புதுச்சேரி திருமுடி அருகே உள்ள சேதுராமன் நகரைச் சேர்ந்தவர் 63 வயதான மஞ்சுநாத். தொழிலதிபரான இவர் அடிக்கடி மசாஜ் சென்டர் சென்றுவருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அந்த வகையில், சென்னை ECR இல் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றுக்கு மஞ்சுநாத் அடிக்கடி சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவருடன் மஞ்சுநாத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை முதலியார்பேட்டையில் புதிய மசாஜ் செண்டர் ஓன்று தொடங்கியிருப்பதாகவும், அங்கு இளம் அழகிகள் இருப்பதாகவும், நீங்கள் இங்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனவும் ராஜேஷ் மஞ்சுநாத்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி மஞ்சுநாத் ராஜேஷ் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இளம் அழகிகளுக்கு பதிலாக ராஜேஷ் மற்றும் மற்றொரு நபர் மட்டும் இருந்துள்ளன்னர். இருவரும் மஞ்சுநாத்தை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்ததோடு வங்கி கணக்கிற்கு 5 லட்சம் அனுப்பும் படி கூறியுள்ளனர்.
இதற்கு மஞ்சுநாத் மறுப்பு தெரிவித்துள்ளார், பணம் அனுப்பாவிட்டால் இளம் அழகிகள் ஆசையுடன் மசாஜ் செண்டருக்கு வந்ததை வெளியே சொல்லிவிடுவேன் என ராஜேஷ் மிரட்டி, மஞ்சுநாத்தை அடித்து அவரிடம் இருந்து 5 லட்சம் பணம், செல்போன் ஆகிவற்றை பறித்துள்ளனனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மஞ்சுநாத் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மசாஜ் செண்டர் உரிமையாளர் ராஜேஷ், அவரது நண்பர் சத்யா ஆகியோரைத் தேடி வருகின்றனர்.