மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் சாவிற்கு அவங்கதான் காரணம்.! இதுதான் நடந்தது.! தற்கொலை செய்துகொண்ட வாலிபர்.! சிக்கிய ஷாக் கடிதம்!!
ஆவடி ஜே.பி எஸ்டேட் முதல் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் 33 வயது நிறைந்த அவினாஷ். இவர் சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பவித்ரா தேவி. திருமணமாகி 7 ஆண்டுகளாகும் இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.
அவினாஷ் மற்றும் பவித்ராவுக்கு அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த 6 மாதத்துக்கு முன் தனது கணவர் அவினாஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் போலீசார் அவினாஷை அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பவித்ரா அவரது பெற்றோர் வீட்டிற்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் அவினாஷ் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் மகளிர் காவல்துறையினர் அவினாஷை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் வீடு திரும்பிய அவர் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவினாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலீசாருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் என் மனைவியின் குடும்பத்தினர் எனக்கு அதிக நெருக்கடி கொடுத்து வருகின்றனர். விவாகரத்துக்கு நான் விண்ணப்பித்துள்ளேன். ஆனால் அவர்கள் அடிக்கடி போலீசில் புகார் கொடுத்து என்னை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். அதனால் எனக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. என் மரணத்திற்கு என் மனைவி, மாமனார், மாமியார், மனைவியின் தங்கை மற்றும் அவர்களது குடும்ப நண்பர்தான் காரணம்" என எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.