மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எத்தனை விளம்பரம்., போதுண்டா சாமி.. லோக்கல் சேனல் விளம்பரத்தால் சொந்துபோன வாடிக்கையாளர்.. கலாய் வீடியோ வைரல்.!
உள்ளூர் சேனல் விளம்பரத்தால் நொந்துபோன வாடிக்கையாளர் கிண்டல் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது..
ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் நிறுவனத்தையும், அதனால் தயாரிக்கப்படும் பொருட்களையும் சந்தைப்படுத்த விளம்பரங்களை நம்பி இருக்கின்றன. விளம்பரப்படுத்தலுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் பேருதவி செய்கிறது.
Xmax என்ற உள்ளூர் தொலைக்காட்சியை வாடிக்கையாளர் கலாய்க்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த தொலைக்காட்சியில் சந்தானம் காமெடி ஒளிபரப்பு செய்யபடுகிறது.
ஆனால், திரை முழுவதும் பல்வேறு கடைகளின் விளம்பரங்கள் அடுக்கடுக்காக மேலும் கீழும் என அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
அதாவது, மீதம் எஞ்சியுள்ள சில இடங்களிலும் விளம்பரங்களை வைத்துவிட்டால், மக்கள் அனைவரும் கண்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆடியோவை மட்டும் கேட்டுவிட்டு இருக்கலாம் என்று கிண்டல் செய்கிறார். இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது.