மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூரம்... வாலிபர் கழுத்தறுத்து படுகொலை... காவல்துறை தீவிர விசாரணை.!
திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் கேன் விநியோகிக்கும் திருச்சியை சேர்ந்த வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராயங்கோயில் காலனி பகுதியில் வசித்து வரும் தென்காசியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் திருச்சியை சேர்ந்த யுவராஜ் இருவரும் குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். யுவராஜ் லட்சுமணன் வீட்டிற்கு அருகிலேயே வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை நீண்ட நேரம் ஆகியும் யுவராஜின் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார் யுவராஜ். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.