#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்.! என்ன காரணம்.?
சீமானின் நாம் தமிழர் கட்சியில் அங்கம் வகித்து வந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் சில கட்சி நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட போவதாக மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சியில் இருந்து திடீரென விலகிய அவர், தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீமான் எனக்கு தொகுதி ஒதுக்காததால் புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.