#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவருக்கு ஏன் தடுப்பூசி போட்டிங்க.? ரகலையை கிளப்பிய மன்சூர் அலிகான்.! வைரல் வீடியோ.!
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரலாம். ஆனால் உயிரிழப்புகள் இருக்காது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி போட்டதுதான் என தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், விவேக் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் 100% எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.
இந்தநிலையில், நேற்று நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனை சென்ற நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கிற்கு ஏன் தடுப்பூசி போடீங்க என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.