மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மரம் நடுவதே தலைசிறந்த அறம்.. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியின் நெகிழ்ச்சி செயல்.!
திருமண நாளிலேயே 1000 மரக்கன்றுகளை நட்டு தம்பதிகள் நெகிழ்ச்சி செயலை செய்துள்ளனர்.
மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து கடந்த 10 வருடமாக வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் மனோஜ் தர்மர். இவர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, செயலிலும் நிரூபித்து இருக்கிறார். இன்று திருச்சியை சார்ந்த மனோஜ் தர்மர் - திவ்யா தம்பதிகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மணவிழாவுக்கு வருபவர்கள் பரிசு பொருட்கள் கொண்டு வர வேண்டாம். எங்களை வாழ்த்திவிட்டு, 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள் என்று அழைப்பிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருமணம் நடந்ததும் புதுமண தம்பதிகள் மண்டத்தில் இருந்து நேரடியாக அடர்வனக்காட்டிற்கு சென்று, அங்கு பணியாற்றி வரும் வயதான பெண்களுடன் சேர்ந்து, தலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் அணிவித்து மரக்கன்றுகளை நட்டனர்.
மரம் நடுவதே தலைசிறந்த அறம்.