#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை: மனைவியை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்..!
கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது மனைவியை கைதுசெய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ்(30). இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மணியரசி என்ற மனைவியும், இரண்டுபிள்ளைகளும் உள்ளனர்.
அற்புதராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அற்புதராஜ் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அறிந்த பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அற்புதராஜ் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அப்போது, அற்புதராஜ் இறப்புக்கு அவரது மனைவி மணியரசி மற்றும் மாமியார் ஆகியோரே காரணம் என்றும், அவர்களை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அற்புதராஜ் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இச்சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில், உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,